8 தோட்டாக்கள் புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் 3 BHK ஜூலை 4-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் தற்போது 3 BHK என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் சித்தார்த், சரத்குமார், தேவையானி, மீதா ரகுநாத், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். மாவீரன் படத்தைத் தயாரித்துள்ள ஷாந்தி டாக்கீஸ் படத்தைத் தயாரித்துள்ளது. பாம்பே ஜெயஸ்ரீ-யின் மகன் அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார்.
சித்தார்துக்கு இது 40-வது படம். தேவையானி 6 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்குத் திரும்பியுள்ளார். சரத்குமார் மற்றும் தேவையானி சூர்யவம்சம், ஒருவன், பாட்டாளி, தென்காசி பட்டனம், சமஸ்தானம் ஆகிய படங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளார்கள். இருவரும் சித்தார்தின் அப்பா, அம்மாவாக நடித்துள்ளார்கள்.
3 BHK-ன் படப்பிடிப்பு கடந்தாண்டு ஜூலையில் தொடங்கியது. பிப்ரவரியில் படத்தின் முதல் பார்வை மற்றும் படப் பெயரை அறிவிப்பதற்கான டீசர் வெளியானது. இதைத் தொடர்ந்து, மார்ச்சில் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
இந்நிலையில், புதிதாகக் காணொளியை வெளியிட்டுள்ள படத் தயாரிப்பு நிறுவனம் படம் ஜூலை 4-ல் வெளியாகும் என அறிவித்துள்ளது. தொடர்ந்து, பட வெளியீட்டுத் தேதியைக் குறிப்பிட்டு புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
Leave a Reply