ஆஸ்கர் விருதுக்கான பிரிவில் சண்டை வடிவமைப்பைச் சேர்ப்பதாக தி அகாடமி அறிவித்துள்ளது.
திரைத் துறையில் மிக உயரிய விருதான ஆஸ்கர், ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டு வருகின்றது. சமீபத்தில் நடைபெற்ற 97வது ஆஸ்கர் விருது விழாவில் அனோரா திரைப்படத்துக்கு 5 விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், ஆஸ்கர் பிரிவுகளின் பட்டியலில் சண்டை வடிவமைப்பு பிரிவைச் சேர்ப்பதாகவும், வருகின்ற 2028ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள 100-வது ஆஸ்கர் விழாவில் இருந்து விருது வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தி அகாடமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”திரைப்படங்களின் மேஜிக்காக இருக்கும் சண்டை இனி ஆஸ்கரிலும் இருக்கும், 2028-ல் இருந்து சண்டை வடிவமைப்புக்கு விருது வழங்கப்படும். 2027 ஆம் ஆண்டு வெளியாகும் படங்கள் பரிந்துரைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளது.
Leave a Reply