குபேரா திரைப்படத்துக்காக நடிகர் தனுஷ் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சொந்தக் குரலில் பாடியுள்ளார்.
தமிழ் மொழியில் பல வெற்றிப் பாடல்களைப் பாடிய தனுஷ், தெலுங்கிலும் பாடல்களைப் பாடத் தொடங்கியுள்ளார்.
வாத்தி படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் குபேரா.
தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, பாலிவுட் நடிகர் ஜிம் சராப் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் முதல் பாடலின் புரோமோ விடியோ இன்று வெளியாகியுள்ளது. முழுப்பாடல் ஏப். 20ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தமிழில் விவேகாவும் தெலுங்கில் பாஸ்கரபாரதியும் எழுதியுள்ள இப்பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார்.
பாடலின் புரோமோவில் வித்தியாசமான தோற்றத்தில் தனுஷ் மிரட்டியுள்ளார். அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் நாகர்ஜுனாவின் கெட்டப் அமைந்துள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Leave a Reply