பிக்பாஸ் புகழ் அமீர் மற்றும் பாவனி தங்களது திருமணத் தேதியை அறிவித்துள்ளனர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்கள் நடன இயக்குனர் அமீரும் சின்னத்திரை நடிகை பாவனியும் கலந்துகொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் பாவனியிடம் தன் காதலை வெளிப்படுத்தி இருந்தார் அமீர். நிகழ்ச்சிக்கு பிறகு 4 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
தொடர்ந்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டு வெற்றியாளர்கள் ஆன நிலையில், நடிகர் அஜித் குமாரின் துணிவு படத்திலும் ஜோடியாக நடித்திருந்தனர்.
தொடர்ந்து ஓம் காளி ஜெய் காளி வெப் சீரியசில் விமலுக்கு ஜோடியாக நடித்த பாவனி வெகுவாக பாராட்டப்பட்டார். அமீர் தொடர்ந்து நடன இயக்குனர் பணியில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், வருகின்ற 20 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இருவரும் அறிவித்துள்ளனர்.
இவர்களின் அறிவிப்புக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply