நடிகை அபிநயா நீண்ட நாள் காதலரைக் கரம் பிடித்தார்.
வாய் பேச முடியாமல், காது கேளாமல் இருந்தபோதிலும் அதனை ஒரு குறையாகக் காணாமல், தன்னுடைய திறமை மூலம் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் அபிநயா.
நாடோடிகள், ஈசன், மார்க் ஆண்டனி உள்ளிட்டப் படங்களில் நடித்து கவனம் பெற்ற அபிநயா, சமீபத்தில் மலையாளத்தில் பணி என்ற திரைப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் மனைவி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
சமீபத்தில் தனது காதலர் கார்த்திக்கை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய அபிநயா, நிச்சயதார்த்த படங்களையும் பகிர்ந்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து வருங்கால கணவருடன் பார்ட்டி செல்வது நிகழ்ச்சியில் பங்கேற்பது என அடுத்தடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், இன்று அபிநயா – கார்த்திக் ஜோடிக்கு இன்று திருமணம் நடைபெற்றது. திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் அபிநயா பகிர்ந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply