நண்பனுக்காக மீண்டும் காமெடியனாக நடிக்கும் சந்தானம்!
கடந்த 10 ஆண்டுகளாக கதாநாயகனாகவே நடித்து வந்த சந்தானம் நீண்ட கால நண்பனுக்காக மீண்டும் காமெடியனாக நடிக்க முடிவு செய்துள்ளார்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தைத் தொடர்ந்து, இனிமே இப்படித்தான் என சூசகமாகக் கூறி தொடர்ந்து நாயகனாகவே நடித்து வந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டிடி ரிட்டன்ஸ் படம் பெரிய வரவேற்பைப் பெற்றது.
சுந்தர் சி இயக்கத்தில் முன்பு எடுக்கப்பட்டு இந்த ஆண்டு வெளியான மதகஜராஜா படத்தில் சந்தானத்தின் காமெடி பலரால் ரசிக்கப்பட்டது. இதனால் மீண்டும் காமெடியனாக நடிக்கலாம் என்ற முடிவுக்கு சந்தானம் வந்திருந்தார்.
இந்தநிலையில் நீண்ட நாள் நண்பனான சிம்புவுடன் காமெடியனாக நடிகர் சந்தானம் நடிக்கவுள்ளார். பார்க்கிக் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் எஸ்டிஆர் – 49 படத்தில்தான் சந்தானம் காமெடியனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
கடைசியாக இது நம்ம ஆளு படத்தில் சிம்புவும் சந்தானமும் சேர்ந்து நடித்திருந்தனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இருவரும் இணைகின்றனர்.
சிம்பு – சந்தானம் கூட்டணியில் உருவான அனைத்துப் படங்களுமே ஹிட் என்பதாலும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கூட்டணி இணையவுள்ளதாலும் எஸ்டிஆர் – 49 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Leave a Reply