கமல்ஹாசன் பெண்ணாக இருந்திருந்தால் நான் நிச்சயம் அவரை திருமணம் செய்திருப்பேன் என கன்னட நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ள கருத்து சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பலதரப்பட்ட மக்கள் மட்டுமின்றி பாலிவுட், கோலிவுட், என பல்வேறு சினிமா துறையைச் சேர்ந்த பிரபலங்களும் ரசிகர்களாக உள்ளனர்.
பலர் அவரை முன்னுதாரணமாக வைத்து படங்களை எடுப்பது, நடிப்பதும் என இன்றளவும் கமல்ஹாசனின் தாக்கம் குறைந்தபாடில்லை. சமீபத்தில் வெளியான விக்ரம் படம் ஹிட் அடித்த நிலையில், தற்போது அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
இதனிடையே ரஜினிகாந்தின் ஜெய்லர் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் பெற்ற சிவராஜ் குமார் கமல்ஹாசன் குறித்து பேசிய கருத்து பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பல்வேறு திறமைகளுக்குச் சொந்தக்காரரான கமல்ஹாசன் பெண்ணாக இருந்திருந்தால், அவரை நான் எப்படியாவது திருமணம் செய்திருப்பேன் எனக் கூறியுள்ளார்.
கமல்ஹாசனின் மீதான அதீத அன்பால் அவர் இப்படிக் கூறியிருந்தாலும், அதனை வெளிப்படுத்த திருமணம் என்ற உறவைத்தான் கூற வேண்டுமா? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். (தன்பாலின ஈர்ப்பாளர்கள் சிவராஜ்குமாரின் இந்த கருத்தால் பாதிக்கப்படலாம் அல்லவா?)
Leave a Reply