சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகி வரும் ரெட்ரோ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
ஜிகர்தண்டா 2-க்கு பிறகு சூர்யாவுடன் இணைந்த கார்த்திக் சுப்புராஜ் ரெட்டோ படத்தை இயக்கி வருகிறார். வழக்கம்போல் சந்தோஷ் நாராயணன் தான் கார்த்திக் சுப்புராஜின் இந்தப் படத்துக்கும் இசையமைத்துள்ளார். பூஜா ஹெக்டேவும் இந்தப் படத்தில் பயணக்கிறார்.
படத்தின் விளம்பரப் பணிகள் ஏற்கெனவே தொடங்கிய நிலையில், தான் முதன்முறையாக ஒரு காதல் படத்தை இயக்கியுள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் நேர்காணல்களில் தெரிவித்து வருகிறார். படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்களுக்கும் இணையத்தில் டிரென்டாகி வருகின்றன.
இவ்வரிசையில், படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ஏப்ரல் 18 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.
படத்தின் டிரெய்லரை அல்ஃபோன்ஸ் புத்ரன் கட் செய்ததாக கார்த்திக் சுப்புராஜ் இன்று காலை அறிவித்தார். இந்த அறிவிப்பு அனைவரையும் பழைய நாளைய இயக்குநர நாள்களை நினைவுபடுத்தியது.
அறிவித்தபடி, இரவு 7 மணிக்குப் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அல்ஃபோன்ஸ் புத்ரன் அவருடையப் பாணியில் டிரெய்லரை கட் செய்துள்ளார். கார்த்திக் சுப்புராஜும் அவருடையப் பாணியில் ஒரு முயற்சியை முன்னெடுத்திருப்பது டிரெய்லரில் தெரிகிறது.
இந்த முயற்சி ரசிகர்களிடத்தில் எந்த மாதிரியான வரவேற்பைப் பெறும் என்பது மே 1 அன்று தெரிந்துவிடும்.
Leave a Reply