டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் நடித்துள்ள கமலேஷ் அடுத்தடுத்து நடித்துவரும் படங்கள் குறித்து தெரிவித்துள்ளார்.
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் நடிகர் சசிக்குமார் நடிப்பில் இந்த வாரம் திரையரங்கில் வெளியான
டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் தனியார் தொலைக்காட்சி பாடல் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி, ஜோதிகாவின் ராட்சசி, விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான குழந்தை நட்சத்திரம் கமலேஷ், சசிகுமாருக்கு மகனாக நடித்துள்ளார்.
டீசர், டிரையிலரிலேயே கமலேஷின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
இந்த நிலையில் கமலேஷ் அடுத்தடுத்து நடித்துவரும் திரைப்படங்கள் குறித்த தகவலைப் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிவரும் படத்திலும் லாரன்ஸின் காஞ்சனா திரைப்படத்திலும் கமலேஷ் நடித்து வருகிறார்.
அறிமுக இயக்குநரான ஜேசன் சஞ்சய் படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply