இளம் வயதில் கிரிக்கெட்டராக இருந்த யோகி பாபு, கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட புதிய படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார்.
இயக்குநர் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார் நடிகர் யோகி பாபு. அதனைத் தொடர்ந்து பல படங்களில் நாயகனாகவும், காமெடியனாகவும் நடித்து வருகிறார்.
இவர் முதன்மை பாத்திரத்தில் நடித்து வெளியான மண்டேலா, பொம்மை நாயகி படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனால் காமெடியகான இருந்து நாயகனாக வளர்ந்த நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்தார் யோகி பாபு.
சமீபத்தில் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில் ஜோரா கைய தட்டுங்க என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மீண்டும் மற்றொரு படத்தில் நாயகனாக யோகி பாபு நடிக்கவுள்ளார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ளது.
இப்படத்தை பொம்மை நாயகி பட இயக்குனர் ஷான் இயக்குகிறார். விரைவில் இப்படத்துக்கான படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
பொம்மை நாயகி என்ற முதல் படத்தைத் தொடர்ந்து, தனது இரண்டாவது படத்திலும் யோகி பாபுவை நாயகனாக வைத்து இயக்குகிறார் ஷான். இதனால், இப்படத்தில் மீதான எதிர்பார்ப்பு மட்டுமல்ல, ஷான் மீதான மரியாதையும் அதிகரித்துள்ளது.
Leave a Reply