ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படமான கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தப் படத்தில் செளபின் சாஹிர், நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதின்ஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பாலிவுட் நடிகர் ஆமிர் கானும் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படம் வருகின்ற ஆகஸ்ட் 14 ஆம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், படம் வெளியாக இன்னும் 100 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ‘100 days to go’ என்ற தலைப்பில் கிளிம்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அனிருத்தின் மாஸ்ஸான பின்னணி இசையில் வெளியாகியுள்ள இந்த கிளிம்ஸ் வீடியோ ரசிகர்கள்.மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
Leave a Reply