சத்யராஜ் – காளி வெங்கட் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ள மெட்ராஸ் மேட்னி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபுவும் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் இணைந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்வரை வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்
இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள மெட்ராஸ் மேட்னி படத்தில் சத்யராஜ், காளி வெங்கட் நாயகர்களாக நடிக்கின்றனர்.
இவர்களுடன் ரோஷிணி ஹரிபிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா, மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம், பானுப்பிரியா உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.
ஆனந்த் ஜி. கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. சி. பால சாரங்கன் இசையமைத்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கதையாக உருவாகும் இப்படத்தை, மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடசன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
இந்தப்படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணி முதன் முறையாக இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Leave a Reply