காயல் பட போஸ்டரை வெளியிட்ட வெற்றி மாறன்!

kaayal

நடிகர் லிங்கேஷ் நாயகனாக நடித்துள்ள காயல் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர் வெற்றி மாறன் வெளியிட்டார்.

இயக்குநர் தமயந்தி இயக்கத்தில் உருவாகி வரும் காயல் படத்தில் லிங்கேஷ், காயத்ரி, அனு மோல், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கார்த்திக் சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் கண்ணையா மற்றும் சுதர்சன் எம்.குமார் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

தனுஷ்கோடி இடத்தை பின்னணியாக வைத்து, திரில்லர் பாணியில் உருவாகிவரும் இப்படத்தை, ஜே.ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *