டோவினோ தாமஸுடன் சேரன் முதல்முறையாக மலையாளத்தில் நடித்துள்ள நரிவேட்டை படம் மே 23 ஆம் தேதி வெளியாகிறது.
தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் பாரம்பரிய தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் மற்றும் ஃப்யூச்சர் ரன்அப் பிலிம்ஸ் இணைந்து தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறார்கள்.
உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தயாராகி, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நரிவேட்டை படம் மே 23ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
அனுராஜ் மனோகர் இயக்கத்தில், சாகித்ய அகாடமி விருது பெற்ற அபின் ஜோசப் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் பின்னணி இசை அமைத்துள்ளார்.
இப்படத்தில், டோவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சராமூடு, பிரியம்வதா கிருஷ்ணன், ஆர்யா சலீம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முதன்முறையாக மலையாளத்தில் இயக்குனர் சேரன் அறிமுகமாகிறார்.
விறுவிறுப்பான கதையம்சத்தைக் கொண்ட இத்திரைப்படத்தை இந்தியன் சினிமா கம்பெனி சார்பில் திப்பு ஷா, ஷியாஸ் ஹாசன் தயாரித்துள்ளனர்.
Leave a Reply