மணிகண்டனின் அடுத்த படத்தை இயக்குபவர் யார்?

மிடில் கிளாஸ் பையனா நடித்து போரடித்துவிட்டதாக மணிகண்டன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடிக்கவுள்ளார்.

குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் என அடுத்தடுத்த வெற்றிகளைத் தொடர்ந்து தற்போது தேசிங்கு பெரியசாமியுடன் இணைந்துள்ளார் மணிகண்டன்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான தேசிங்கு பெரியசாமி, சிம்புவை வைத்து படம் இயக்க காத்துக்கொண்டிருந்தார்.

சிம்புவின் 50வது படமாக அது இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதால், அதற்கு முன்பு சிறிய பட்ஜெட் படத்தை இயக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

இதில், நடிகர் மணிகண்டன் நாயகனாக நடிக்கவுள்ளார். நடுத்தர குடும்பத்து இளைஞனாக படத்தில் தோன்றி மக்கள் மனங்களைக் கவர்ந்த மணிகண்டன், இப்படத்தில் என்ன செய்யப்போகிறார் என பொருத்திருந்து பார்ப்போம்.

மிடில் கிளாஸ் பையனா நடித்து போரடித்துவிட்டதாக மணிகண்டன் சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், இப்படத்தில் மணிகண்டன் எத்தகைய பாத்திரத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *