பன் பட்டர் ஜாம் படத்தை பாராட்டிய விஜய்!

பிக் பாஸ் புகழ் ராஜு ஜெயமோகன் நடிக்கும் புதிய படத்தை நடிகர் விஜய் பாராட்டியுள்ளார். படம் நன்றாக உள்ளதாகவும், தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டதாகவும் ராஜு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5-ல் வெற்றியாளரான ராஜு பன் பட்டர் ஜாம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இப்படத்தில் ஆத்யா பிரசாத், பவ்யா திரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இளைஞர்களில் இக்கால வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் ஜூலை 18-ம் தேதி வெளியாக உள்ளது.

இதனிடையே இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியானது. இதனை, நடிகரும் தவெக தலைவருமான விஜய் பார்த்து பாராட்டியுள்ளார். விஜய் கூறியதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராஜு, வேற லெவல் பா.. தியேட்டருக்கு வந்து படம் பார்க்கனும்னு தோன்றுது” என தொலைபேசியில் விஜய் பாராட்டியதாக பதிவிட்டுள்ளார்.

இதைவிட வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும் எனவும் ராஜு குறிப்பிட்டுள்ளார்.

விஜய் டிவியில் இருந்து ஒவ்வொரு பிரபலமாக சினிமாவில் நாயகனாக வலம் வரும் நிலையில், விஜய்யின் இந்த பாராட்டு படத்திற்கு பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. இனி இப்படம் விஜய் ரசிகர்கள் கையில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *