ஓடிடி தளங்களில் இந்த வாரம் 5 முக்கியப் படங்கள் வெளியாகவுள்ளன.
தனுஷ் இயக்கி அவரது சகோதரி மகன் பவிஷ் நடிப்பில் திரையரங்கில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் அமேசான் தளத்தில் மார்ச் 21 வெளியானது.
அதேபோல் பிரதீப் ரங்கனாதனின் டிராகன் திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்திலும் ஜெய் நடித்த பேபி அண்ட் பேபி சன் நெக்ஸ்ட் தளத்திலும் காணலாம்.
மேலும், மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ஆபிசர் ஆன் டியூட்டி படம் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள நிலையில், மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் மார்ச் 25 ஆஹா தளத்தில் வெளியாகவுள்ளது.