அஜித் நடிப்பில் 2014-ல் வெளியான வீரம் திரைப்படம் மே 1-ல் மறுவெளியீடு செய்யப்படுகிறது.
அஜித் பிறந்தநாளை முன்னிட்டு இப்படம் மறுவெளியீடு செய்யப்படுகிறது.
அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் 2014-ல் வெளியான படம் வீரம். அஜித் – சிறுத்தை சிவா கூட்டணியில் வெளியான முதல் படமும் இது தான். சந்தானத்தின் நகைச்சுவை படத்துக்குப் பெரிய பலமாக இருந்தது. படம் வெளியானபோதே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுவும் ஜில்லாவுடன் போட்டியிட்டதில் ஒப்பீட்டளவில் வீரம் படமே ரசிகர்களிடத்தில் கூடுதல் வரவேற்பைப் பெற்றதாகவும் சொல்லப்படுவதுண்டு.
அஜித் பிறந்தநாளான மே 1 ஐ கொண்டாடும் விதமாக இந்த ஆண்டு வீரம் படம் மறுவெளியீடு செய்யப்படுகிறது. 2014-ல் வெளியானபோது விஜயுடன் மோதிய வீரம், 11 ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறை சூர்யாவுடன் மோதுகிறது. மே 1 அன்று சூர்யாவின் ரெட்டோவும் வெளியாகிறது.
அண்மைக் காலமாக பெரிய நட்சத்திரங்களின் மறுவெளியீட்டுப் படங்கள் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இன்று கூட விஜய் நடித்த சச்சின் திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
Leave a Reply