TentFlicks

Around Cinema

கார் ரேஸில் அஜித் புதிய சாதனை!

பெல்ஜியம்மில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் புதிய சாதனை படைத்துள்ளார்.

சமீப காலமாக கார் பந்தயத்தில் தீவிர கவனம் செலுத்திவரும் அஜித் குமாருக்கு குட் பேட் அக்லி வெற்றியைத் தொடர்ந்து கார் ரேஸிலும் வெற்றி கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகான அஜித் குமார், கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களை நடிப்பதற்காகவும், எஞ்சிய மாதங்களில் முழுக்க கார் பந்தயத்தில் ஈடுபடவுள்ளதாகவும் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. விடாமுயற்சியில் ஏமாற்றமடைந்த அஜித் ரசிகர்களுக்கு குட் பேட் அக்லி படம் விருந்தாக அமைந்தது.

படம் வெளியானதும் கார் ரேஸில் கவனம் செலுத்திய அஜித் குமாரின் அணி, தற்போது பெல்ஜியம் நாட்டில் ஸ்பா ஃபிரான்கோர்சாம்ஸ் என்ற சர்கியூட்டில் நடத்த ரேஸில் பங்கேற்றுள்ளது.

இந்த ரேஸில் அஜித்தின் டீம் இரண்டாம் இடம் பிடித்து சாதித்து இருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது. அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா இதனை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இந்திய மோட்டார் போர்ட்ஸுக்கு இது பெருமையான தருணம் என ரசிகர்கள் இதனைக் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *