நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.
சமீபத்தில் முதல் மகளான ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும், தம்பி ராமையா மகன், உமாபதி ராமையாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு இரண்டாவது மகளுக்கு திருமணம் செய்துவைக்கவுள்ளார் அர்ஜுன்.
அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா அர்ஜுன், தற்போது தனது காதலரை அறிமுகப்படுத்தி இருக்கிறார். மாப்பிள்ளை இத்தாலியைச் சேர்ந்தவர்.
இதனால் அர்ஜுனின் மொத்த குடும்பமும், இத்தாலியில் மாப்பிள்ளை ஊருக்குச் சென்றுள்ளனர். அங்கு திருமண நிச்சயமும் நடந்து முடிந்துள்ளது.
இத்தாலியில் படிப்பதற்காகச் சென்றபோதே அஞ்சனா காதலில் விழுந்துள்ளார். தற்போது 13 வருட காதலை திருமணம் வரைக் கொண்டுவந்துள்ளார்.
நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில், இத்தாலியில் அர்ஜுன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபலங்கள் பலர், இல்லற வாழ்க்கையில் நுழையவுல்ள புதுமண ஜோடிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இரண்டு மகளுக்கும் திருமணம் முடித்து கடமையை நிறைவு செய்யவுள்ள அர்ஜுன் முகத்தில் மகிழ்ச்சி தாளவில்லை.
Leave a Reply