தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தமிழ் நடிகர்கள் சிலர் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தவகையில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் படத்தில் நடித்து வரும் நடிகர்கள் சிம்பு, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரிடமும் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
டான் பிக்சர்ஸ் நிறுவனரான ஆகாஷ் பாஸ்கரன் இட்லி கடை, பராசக்தி, சிம்பு – 49, இதயம் முரளி உள்ளிட்ட படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறார்.
ஒரு படம் தயாரித்த பிறகு மற்றொரு படத்தை தயாரிக்கும் பட தயாரிப்பு நிறுவனத்தின் நடவடிக்கை மாறாக, டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் ஒரே நேரத்தில் பல படங்களில் முதலீடு செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக உள்ல லைகா கூட, இதுபோன்று ஒரே நேரத்தில் பல பெரிய நடிகர்களின் படங்களைத் தயாரித்தது இல்லை.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இதில் சில முக்கியமான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றினர். அதில், நடிகர் தனுஷுக்கு இட்லி கடை படத்தை இயக்கி, நடிக்க ரூ. 40 கோடியும், சிவகார்த்திகேயனுக்கு முன்பணமாக ரூ. 25 கோடியையும் சிம்புவுக்கு ரூ. 15 கோடியும் கொடுத்த ஆவணங்களும் சிக்கியுள்ளன.
இந்தப் பணம் சட்டவிரோத கிடைத்திருக்கலாம் என்ற கோணத்தில் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், அமலாக்கத் துறை விசாரணையில் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் சிக்கவுள்ளதாகக் கூறப்படும் செய்தி திரைத் துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply