ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்த தனுஷின் குபேரா டீசர்!

kubera

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்திற்கான முன்னோட்ட வீடியோவாக இதனை வெளியிட்டுள்ள படக்குழு, படம் எப்படிப்பட்டது என்பதை ரசிகர்கள் மத்தியில் பதிய வைக்கும் முயற்சியாக இதனைச் செய்துள்ளது.

வழக்கமாக பல படங்களும் இதனைச் செய்தாலும், குபேரா படம் இதில் வெற்றி பெற்றுள்ளது எனலாம். படத்தில் தனுஷ் இடம்பெறும் பல்வேறு கெட்டப்கள் இதில் காட்டப்பட்டுள்ளன.

இதனால், தனது பாத்திரத்துக்கு வலு சேர்க்கும் வகையிலான நடிப்பை இப்படத்திலும் தனுஷ் மெனக்கெட்டு கொடுத்துள்ளார் எனத் தெரிகிறது. பிச்சைக்காரனாகவும், புதிய பணக்காரனாகவும் தனது கெட்டப்பில் மட்டுமின்றி நடிப்பில் வித்தியாசத்தைம் காண்பித்துள்ளார்.

தொழிலதிபர் ஒருவர் உலகமே தனக்குச் சொந்தமானது என நினைக்கிறார். மறுபுறம் பிச்சைக்காரரான தனுஷும் உலகம் எனக்கானது என நினைப்பரவாகக் காட்டப்படுகிறார்.

இந்த இருவரையும் ஒரு புள்ளியில் இணைக்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. டீசரின் இறுதியில், தொழிலதிபரான நாகர்ஜுனாவை தனுஷ் அடிக்க வருவதைப்போன்று டீசர் முடிகிறது. இதனால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

தனுஷின் 51-வது படமாக உருவாகியுள்ள இப்படத்தில், ராஷ்மிகா மந்தனா, சுனைனா, கூல் ரவிசர்மா உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

லவ் ஸ்டோரி, ஃபிடா போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய சேகர் கம்முலா, இப்படத்தை இயக்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *