மலையாளத்தில் பிரபல திரைப்பட நடிகரான ஷைன் டாம் சாக்கோவுக்கு படங்களில் நடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்த நிலையில் இவர் போதைப்பொருள் பயன்படுத்துவது காவல் துறையினரின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டதால், அவருக்கு படங்களில் நடிக்க தடை விதிப்பதாக கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கேரள திரைப்பட நடிகை வின்சி அலோசியஸ், பிரபல நடிகர் ஒருவர் போதையில் தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக நடிகர் சங்கத்திடம் புகார் அளித்தார். இந்தப் புகாரில் அத்துமீறி நடந்துகொண்ட நடிகர் ஷைன் டாம் சாக்கோ எனத் தெரியவந்தது.
இதற்கு மத்தியில் போதைப்பொருள் தொடர்பாக விடுதி ஒன்றில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டபோது அங்கிருந்த ஷைன் டாம் சாக்கோ தப்பியோடியதாக காவல் துறை தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து அவரிடம் நடிகர் சங்கம் மேற்கொண்ட விசாரணையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது.
இதுகுறித்து மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்துடன், கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு விவாதித்தது.இந்த விவாதத்தின் முடிவில் நடிகர் ஷைன் டாம் சாக்கோவை திரைப் படங்களில் நடிப்பதில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு முடிவு செய்தது.
எனினும் தான் தவறு செய்துவிட்டடடாகவும் தனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். எனினும் கேரள திரைப்பட கூட்டமைப்பு தங்கள் நிலைப்பாட்டில் உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
Leave a Reply