ஜனநாயகனுடன் மோதுகிறதா பராசக்தி?

vijay sivakarthikeyan

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படத்துடன் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் மோதவிருப்பதாக வெளியான தகவலுக்கு அப்படத்தின் இயக்குநர் சுதா கொங்காரா விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், முழுநேர அரசியலில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். தனது கடைசி படமாக எச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இதனிடையே, இறுதிச் சுற்று, சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களை இயக்கிய சுதா கொங்கரா, கதாநாயகனாக சிவகார்த்திகேயனை வைத்து பராசக்தி படத்தை இயக்கி வருகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

பழைய மெட்ராஸை மையமாக வைத்து படத்தின் கதை அமைந்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இறுதிகட்ட படப்பிடிப்பு மட்டுமே எடுக்க வேண்டியிருக்கும் நிலையில், ஜனநாயகன் திரைப்படத்துக்கு போட்டியாக பராசக்தியை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் பரவின.

இதுகுறித்து சமீபத்தில் செய்தியாளர்களுடன் பேசிய சுதா கொங்கரா, 40 நாள்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதமிருப்பதாகவும், ஜனநாயகன் படத்துக்கு போட்டியாக பராசக்தியை வெளியிட இருப்பதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என்று விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், தயாரிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *