நடிகரும் இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் குமார், கயாது லோஹர் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்ட ஜி.வி. பிரகாஷ் குமார், வெயில் திரைப்படத்துக்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இசையால் ரசிகர்களை ஈர்த்த ஜி.வி. பிரகாஷ், டார்லிங் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து நடிப்பிலும் தனிக் கவனம் செலுத்தி வரும் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான அவரது 25 வது படமான கிங்ஸ்டன் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், அறிமுக இயக்குனர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்க புதிய படத்தின் பெயர் போஸ்டர் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
டிராகன் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த கயாது லோஹார் நாயகியாக நடிக்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
இந்த படத்துக்கு இம்மார்ட்டல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஜி.வி.யும் கயாதுவும் பாத் டப்பில் இருப்பது போன்ற போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பக்கா லவ் ஸ்டோரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மார்ட்டல் என்றால் அழியாத என்று பொருள்.
Leave a Reply