இயக்குநர் வெற்றி மாறன் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட மையல் படத்தின் கதை யாருடையது என்பது குறித்த இயக்குநர் ஏபிஜி ஏழுமலை தெரிவித்துள்ளார்.
விரைவில் வெளியாகவுள்ள மையல் படத்தில் சேது கதாநாயகனாகவும் சம்ரிதி தாரா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் பி.எல். தேனப்பன், சூப்பர் குட் சுப்ரமணி, ரத்னகலா மற்றும் சி.எம். பாலா ஆகியோரும் நடித்துள்ளனர்.
இதனிடையே மையல் படம் குறித்து இயக்குநர் பேசியதாவது, “காதல், துரோகம் மற்றும் சமூக போராட்டங்கள் என உணர்வுப்பூர்வமான கதையை மையல் பேசுகிறது. பார்வையாளர்களும் தங்களுடன் நிச்சயம் தொடர்பு படுத்திக்கொள்வார்கள்.
இதுபோன்ற தாக்கம் ஏற்படுத்தும் வலுவான கதையைக் கொடுத்த ஜெயமோகன் சாருக்கு நன்றி. அவருடைய ஸ்ட்ராங் ரைட்டிங் மற்றும் தெளிவான கதாபாத்திரங்களின் குணாதிசியங்கள்தான் எனக்கு சரியான நடிகர்களைத் தேர்ந்தெடுக்க உதவியது.
நடிகர்கள் சேது, சம்ரிதி தாரா மற்றும் மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். என்னை நம்பிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி. தொழில்நுட்பக் குழுவினரும் படத்திற்கு மிகப்பெரிய பலம். மையல் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும் என நம்பிக்கையுடன் கூறினார்.
Leave a Reply