பத்ம ஸ்ரீ விருதுடன் பத்ம பூஷன் விருது வென்ற அஜித்தைச் சந்தித்தது தனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என சமையல் கலைஞர் செஃப் தாமு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞர் தாமோதரனுக்கு (செஃப் தாமு) பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் ஏப்ரல் 28 அன்று விருது வழங்கப்பட்டது. கலைத் துறையில் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அவருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏப்ரல் 28 அன்று விருது வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின்போது குடியரசுத் தலைவர் மாளிகையில் நடிகர் அஜித் மற்றும் சமையல் கலைஞர் செஃப் தாமு சந்தித்துள்ளார்கள்.
இந்தச் சந்திப்பு குறித்து செஃப் தாமு இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“விருது பெறுவதற்காக குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றபோது நடிகர் அஜித்தைச் சந்தித்தேன். பத்ம ஸ்ரீ விருதை வென்றதுடன் எனக்குப் பிடித்த பத்ம பூஷன் விருதை வென்ற நடிகர் அஜித்தைச் சந்தித்தது இரட்டிப்பு மகிழ்ச்சி. மிகவும் யதார்த்தமாக நட்புறவைப் பேணும் மனிதராக இருந்தார்” என்று பதிவிட்டுள்ளார்.
Leave a Reply