ஊட்டியில் நடிகர் மோகன்லாலுக்குச் சொந்தமான பங்களாவின் ஒருநாள் வாடகை மதிப்பு எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சினிமாவில் பிரபலங்களாக உள்ள பலரும் சினிமாவைத் தாண்டி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் மலையாள நடிகரான மோகன்லால் ஊட்டியில் உள்ள தனக்குச் சொந்தமான பங்களாவின் மூலம் பணம் பார்த்து வருகிறார்.
ஆரம்பத்தில் தனது குடும்பத்தினர் வந்து சென்றால் தங்குவதற்காக ஊட்டி பங்களாவை வாங்கியுள்ளார். எனினும் தற்போது அதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டதால், அதனை தனியார் சுற்றுலா அமைப்புடன் சேர்ந்து வாடகை விடும் பணியைத் தொடங்கியுள்ளார்.
ஊட்டியில் இருந்து 15 நிமிடங்கள் செல்லும் தொலைவில் மோகன் லாலின் பங்களா அமைந்துள்ளது. இந்த பங்களாவுக்கு நாளொன்றுக்கு ரூ. 37,000 வாடகை வசூலிக்கப்படுகிறது. இணையதளம் மூலம் இந்த பங்களாவை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
இதற்கு முன்பு, நடிகர் மம்மூட்டியும் கேரளத்தில் உள்ள தனது இல்லத்தை சுற்றுலாப் பயணிகள் தங்கிச் செல்வதற்காக வாடகைக்கு விட்டுள்ளார். இதன் வாடகை ஒரு நாளுக்கு ரூ. 75,000. கேட்கவே ஆச்சரியமாக உள்ளதல்லவா?
இவற்றை பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளே முன்பதிவு செய்து தங்கிச் செல்கின்றனர். உள்ளூர்வாசிகளுக்கு கட்டுபடியாகாது.
Leave a Reply