ஓடிடியில் இந்த வாரம் வெளியான படங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழில் மிகப்பெரிய வெற்றியடைந்த பரியேறும் பெருமாள் படத்தின் கன்னட ரீமேக்கான ‘கார்க்கி’ திரைப்படம் இன்று (ஜூன் 20) சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
அகமது கபீர் இயக்கிய ‘கேரளா கிரைம் பைல்ஸ்’ வெப் தொடரின் இரண்டாம் பாகம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று (ஜூன் 20) வெளியானது.
பிண்டோ ஸ்டீபன் இயக்கிய மலையாள மொழிப்படமான பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி திரைப்படம் ஜி5 ஓடிடி தளத்தில் இன்று (ஜூன் 20) வெளியானது. இதில், திலீப், ராணியா ராணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சூரஜ் வெஞ்சமூடு, சந்தீப் பிரதீப் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘படக்களம்’ படத்தை ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம். மனு ஸ்வராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
நரேன், கதிர் நடிப்பில் வெளியான ‘யுகி’ திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இன்று (ஜூன் 20) வெளியானது.
இவற்றுடன் ‘சேவ் நல்ல பசங்க’ என்ற வெப் தொடர் ஆஹா ஓடிடி தளத்தில் இன்று (ஜூன் 20) வெளியானது. ஓடிடியில் புதிய ரிலீஸ்களுடன் வார இறுதியைக் கொண்டாடுங்க.
Leave a Reply