இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்!

இந்த வாரம் ஓடிடி தளங்களில் பல முக்கிய படங்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தின் அடுத்த பாகமான டிடி நெக்ஸ்ட் லெவல் ஜி5 தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது. இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சந்தானத்துடன் கெளதம் வாசுதேவ், செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் வெளியான லெவன் திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அபிராமி, ரித்விகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மலையாளத்தில் வெளியான ஆலப்புழா ஜிம்கானா திரைப்படம் சோனி லைவ் தளத்தில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது. நஸ்லன் கஃபூர், அனகா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை கலீத் ரஹ்மான் இயக்கியுள்ளார்.

அக்‌ஷய் குமார், மாதவன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான கேசரி சாப்டர் 2 ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது. அதேபோல், சமந்தா தயாரிப்பில் உருவான சுபம் திரைப்படமும் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *