விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
டிஜே மத்தியில் புகழ்பெற்றவராக அறியப்படும் வசி சாச்சி என்பவரை பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் செய்துகொண்டுள்ளார்.
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜூனியர், ஸ்டார்ட் மியூசிக் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. தனக்கென்று உரிய பாணியில் நகைச்சுவையாகவும் கேலி கிண்டலாகவும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதால், ரசிகர்கள் மனதில் இவருக்கென்று தனி இடம் உண்டு. பிக் பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார் பிரியங்கா தேஷ்பாண்டே. குக் வித் கோமாளியில் வெற்றியாளர் என்கிற பெருமையும் பிரியங்காவுக்கு உண்டு.
இவருக்கும் வசி சாச்சி என்பவருக்கும் மகிழ்ச்சி பொங்க திருமணம் நடந்து முடிந்துள்ளது. பெரிய அறிவிப்புகள் இல்லாமல் கூட்டங்களைக் கூட்டாமல் மிகவும் நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ திருமணம் நடந்து முடிந்துள்ளது.
பேஸ்புக், இன்ஸ்டகிராம் பக்கங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்து திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பிரியங்கா தேஷ்பாண்டே. இருவருடையத் திருமணப் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.
பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு இது இரண்டாவது திருமணம். வசி சாச்சி என்பவர் டிஜே கலைஞராகவும் தொழிலதிபராகவும் உள்ளார். இருவருடையத் திருமணத்துக்கும் பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
Leave a Reply