நடிகர் மோகன் லால் நடிப்பில் வெளியான துடரும் திரைப்படம் வசூலைக் குவித்து வருகின்றது.
மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாரான மோகன் லால் நடிப்பில் அண்மையில் வெளியான எம்புரான் திரைப்படம் ரு. 250 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இதனைத் தொடர்ந்து, இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன் லாலும் ஷோபனாவும் இணைந்து நடித்துள்ள துடரும் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.
கார் ஓட்டுநராக மோகன் லால் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மையமாகக் கொண்டு, குடும்ப கதை பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையடுத்து, துடரும் திரைப்படத்துக்கு அதிகளவிலான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டன.
இந்த நிலையில், முதல் வாரத்தில் ரூ. 100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், இந்த வார இறுதியிலும் வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply