சசிகுமார், சிம்ரன் நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படம் மே 1 அன்று வெளியாகவுள்ள நிலையில், இயக்குநர் ரத்ன குமார் படத்தின் விமர்சனத்தைப் பதிவிட்டுள்ளார்.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் நடித்துள்ள படம் டூரிஸ்ட் ஃபேமிலி. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தைப் பார்த்துள்ள இயக்குநர் ரத்ன குமார் தனது எக்ஸ் தளத்தில் பாராட்டி விமர்சனத்தைப் பதிவிட்டுள்ளார்.
“டூரிஸ்ட் ஃபேமிலி அற்புதமான படம். சிரிப்பதற்கானத் தருணங்கள் நிறைய உள்ளன. இதயம் நிறைந்த ஓர் எளிய படம். படம் முழுக்க உருக்கமான காட்சிகள் உள்ளன.
என்னைப் பொறுத்தவரை ஒரு நடிகராக சசிகுமாருக்கு இதுதான் சிறந்த படம். இன்டர்வெலுக்கு பிறகு நிகழ்ந்த காட்சிகளில் தெறித்துவிட்டேன். அற்புதமாக எழுதப்பட்ட காட்சி. திரையரங்கம் அதிரப்போகிறது.
அனைத்துக் கதாபாத்திரங்களும் பிடித்தமானவையாக மாறிவிட்டன. அபிஷன் ஜீவிந்துக்கு வியக்க வைக்கும் தொடக்கம். வயது 24 தான் ஆகிறது. ஆனால், அவர் ஏற்கெனவே களமிறங்கிவிட்டார். உங்களுடைய ரசிகராக மாறிவிட்டேன். படத்தில் 6 இடங்களில் விஜய் ரெஃபெரன்ஸ்கள் உள்ளன. அனைத்தும் சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன” என்று ரத்ன குமார் பதிவிட்டுள்ளார்.
படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் ஏற்கெனவே ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
Leave a Reply