விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்து வரும் ஃபீனிக்ஸ் திரைப்படம் ஜூலை 4-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதியின் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ஃபீனிக்ஸ். சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இப்படத்தை இயக்குகிறார். இதில் தொழில்முறை குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார் சூர்யா. டீசர் ஏற்கெனவே வெளியான நிலையில், படம் கடந்த நவம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பிறகு, தேதி குறிப்பிடாமல் படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. ஜூலை 4 அன்று படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி இதற்கான புதிய போஸ்டரை இன்று மாலை வெளியிட்டார்.
இப்படத்தில் சூர்யாவுடன் வரலஷ்மி சரத்குமார், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கேஎல் படத்தொகுப்பு செய்துள்ளார்.
Leave a Reply