TentFlicks

Around Cinema

நடிகர் ஸ்ரீக்கு என்ன ஆச்சு?

பிரபல நடிகரான ஸ்ரீ இன்ஸ்டாகிராமில் ஆபாசமான விடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு, மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்து நல்ல நடிகர் எனப் பெயரெடுத்தவர் ஸ்ரீ. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தயக்கம் காரணமாக ஓரிரு நாள்களிலேயே வீட்டை விட்டு வெளியேறினார்.
இறுதியாக, இவர் நடித்த இறுகப்பற்று திரைப்படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்றதுடன் ஸ்ரீயின் கதாபாத்திரமும் பேசப்பட்டது.

https://www.instagram.com/reel/DIVy8X-RFoF/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

அதன்பின், ஸ்ரீ நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. இன்றைய இளம் நடிகர்களில் நம்பிக்கைக்குரியவராக மாறியவர் தற்போது இன்ஸ்டாகிராமில் உடல் எடை மெலிந்த தோற்றத்தில் புகைப்படங்களைப் பதிவேற்றுவதுடன் ஆபாசமான விடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இதனால், அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் ஸ்ரீக்கு மனரீதியாக பிரச்னைகள் இருக்கின்றன என கருத்து தெரிவித்ததுடன் நல்ல மருத்துவரைச் சந்திக்க சொல்லி அறிவுரை கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *